தமிழகத்தின் வலுவான வருங்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் – அமைச்சர் சக்கரபாணி

Default Image

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான காகிதமில்லா முழுமையான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில், தமிழக அரசின் முழுமையான பட்ஜெட்டை குறித்து உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது ஆளுமையாலும், நிர்வாகத் திறனாலும் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது வழிகாட்டுதலில், தமிழகத்தின் வலுவான வருங்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலை சிறந்து விளங்குவதற்கு கழக அரசு மேற்கொள்ளும் மகத்தான முயற்சிகளின் முன்னோட்டமாக 2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்