இன்று தாக்கலாகும் பட்ஜெட்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக திட்டம்:
இந்த நிலையில், காலை 10 மணிக்கு கூடும் சட்டமன்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு, பால் பொருட்கள் விலை உயர்வு, நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப அதிமுக திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆலோசனை:
இதனிடையே, தலைமை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக சார்பில் எழுப்பவேண்டிய கேள்விகள், சிறப்பு கவன ஈர்ப்பு போன்றவை குறித்து ஆலோசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…