புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் செல்வம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்.எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ. 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசின் செலவினங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கிடையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்ததை கண்டித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி அரசிடம் போதிய நிதி இருந்தும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்று கூறி திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி காலை 9.50 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் காலை 10.55 மணிக்கு முடித்தார். பின்னர் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் சட்டப்பேரவை ஒத்தி வைத்தார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…