தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்!

Default Image

 

தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் சார்பில் கீழ்கண்ட துறைகளுக்கான நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ₹750 கோடி ஒதுக்கீடு

மகளிர் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின் வழங்க ₹60.58 கோடி ஒதுக்கீடு..

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ₹27,205.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்படி 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

ஓய்வூதிய திட்டத்திற்கு ₹25,362 கோடி நிதி ஒதுக்கீடு

பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ₹420 கோடி செலவில் 20,000 வீடுகள் கட்டித் தரப்படும்

உளுந்து, பச்சைப் பயிர், துவரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும்..

₹28.23 கோடி செலவில் 20 தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்

450 ஏக்கரில் உணவுப்பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும்

திண்டிவனம் அருகே பெலாக்குப்பம் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்படும்..

நெடுஞ்சாலைத் துறைக்கு ₹11,073.66 கோடி நிதி ஒதுக்கீடு

திருமண உதவித் திட்டத்திற்கு ₹724 கோடி ஒதுக்கீடு

மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கு ₹250 கோடி ஒதுக்கீடு

மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டத்திற்கு ₹758 கோடி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களுக்காக ₹545.21 கோடி ஒதுக்கீடு .

கிண்டியில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்க ₹20 கோடி நிதி ஒதுக்கீடு

காவல்துறைக்கு ரூ.7,877 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்படி காவல்துறைக்காக 35 கட்டடங்கள், 15 காவல் நிலையங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ. 20 கோடி ஒதுக்கீடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்