2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில் ,மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை என்று திமுக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை.திட்டங்களும் கிடைக்கவில்லை .ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிரவேறு எந்த அறிவிப்பும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.அரசுக்கு தொலைநோக்கு பார்வையும் இல்லை. தொலைந்துபோன பொருளாதாரத்தை மீட்க வழியும் தெரியவில்லை.
இந்தியாவுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட் இல்லை. ஏமாற்றம் தரும் பட்ஜெட் இது. நடுத்தர மக்களை மனதில் கொள்ளாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும் பட்ஜெட் இது. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மனநிறைவைத் தராத பட்ஜெட்.நிதிநிலை அறிக்கை முழுவதும் கார்ப்பரேட்களின் மீதான அக்கறையை நேரடி ஒலிபரப்பு செய்கிறது .வேலைவாய்ப்பு இழப்பை தடுத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும் திட்டங்களும் இல்லை .மத்திய அரசின் பட்ஜெட்டிற்கு திமுக சார்பில் மன நிறைவின்மையை தெரிவிக்கிறேன்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…