தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

tn budget 2024

நடப்பாண்டுக்கான தமிழக அரசின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், தமிழக அரசின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

TNBudget 2024 Live : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்….

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதன்பின் தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது.

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு என கூறிய அமைச்சர், இதுவரை திமுக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி முதல் தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சி வரையில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்