முதல்வர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. நேற்று 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அதே போல இன்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து தற்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்த விவாதம் வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…