பட்ஜெட் கூட்டத்தொடர்..! முதல்வர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை தொடங்கியது..!

Default Image

முதல்வர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை தொடங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. நேற்று 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதே போல இன்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை சட்ட பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து தற்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்த விவாதம் வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்