தமிழக அரசின் 2018_ 2019_ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான சட்ட பேரவை இன்று நடைபெற்றது.தமிழக துணை முதல்வரும் , நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சுமார் 2.45மணி நேரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் வருகின்ற திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறுகிறது பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்ய சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதத்தை வருகின்ற திங்கள் முதல் வியாழக்கிழமை நடைபெறும் என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார்.