பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி வழங்கும் பட்ஜெட்டாகவே உள்ளது – விஜயகாந்த்
பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி வழங்கும் பட்ஜெட்டாகவே உள்ளது என விஜயகாந்த் அறிக்கை.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களால் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட மகளீருக்கான உரிமை தொகை குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயாகாந்த் அறிக்கை
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயாகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கப்பூர்வமான எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் தான் உரிமை தொகை வழங்கப்படும் என சொல்வது எந்த வகையில் நியாயம்.
நிதி நிலை அறிக்கையில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காதது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, தொழிற்சாலைகள் அமைப்பது, சிறு குறு தொழில்களை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு, வறுமையை ஒழிப்பது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி வழங்கும் பட்ஜெட்டாகவே உள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது,பெட்ரோல், டீசல் வரி குறைப்பு, தொழிற்சாலைகள் அமைப்பது, சிறு குறு தொழில்களை மேம்படுத்துதல்,வேலைவாய்ப்பு, வறுமையை ஒழிப்பது, உள்கட்டமைப்பு,நதிகள் இணைப்பு,ஓய்வூதிய திட்டம் & அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. pic.twitter.com/UNFQDyKLoG
— Vijayakant (@iVijayakant) March 20, 2023