” மக்களுக்கான பட்ஜெட் ” மோடி சாமானியர்களுக்கான பிரதமர்..தமிழிசை பெருமிதம்…!!
மோடி சாமானிய மக்களுக்கானவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்
மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில் , இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் , மோடி சாமானியர்களுக்கான பிரதமராக உள்ளார் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.