TN Buget: ரூ.68,000 கோடி வருவாய் பற்றாக்குறை ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம் – நிதியமைச்சர்
வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடி அளவிற்கு குறைத்துள்ளோம் என பட்ஜெட்டில் உரையில் நிதியமைச்சர் தகவல்.
தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான படஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய நிதியமைச்சர், தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் மேலும் குறைக்கப்படும்.
வருவாய் பற்றாக்குறை ரூ.68,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பல திட்டங்களை செயல்படுத்தும்போது பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வருவாய் மதிப்பில் வரு வருவாய் 5.58% குறைந்ததே வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு எடுத்த முயற்சி காரணமாக ஜிடிபியில் 6.9% வரி வருவாய் உயர்ந்துள்ளன எனவும் குறிப்பிட்டார்.