தமிழக பட்ஜெட் 2019:சென்னையில் 2000 கோடி செலவில் பார்க்கிங் கட்டிடம்!!

Default Image

இந்த ஆண்டு 2019-2020  ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.இதற்காக இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது.தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.இன்றைய தினமே 2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக இன்று  பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும்.2019 – 2020ல் தமிழக அரசின் கடன் ₹3,97,495 கோடியாக இருக்கும்.அதேபோல் செலவீனங்கள், 208617 கோடியாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,681 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து துறைக்கு 1297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.2,00,000 நான்கு சக்கர வாகனங்கள்,2,00,000 இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவில் வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள் மறறும் சாலையோர திறன்மிகு வாகன நிறுத்தம் ஆகியவற்றை செயல்படுத்த விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டத்தை, அரசு-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் ரூ.2,000 கோடி  செலவில் சென்னை நகரில் தமிழக அரசு செயல்படுத்தும். தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் இத்திட்டத்திற்குத் தேவையான நிதியுதவியை அளிக்கும்.

அதேபோல்  முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய 2019-2020 ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும். ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று  பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்