நடு ரோட்டில் தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற அண்ணண்..!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்கும், அவரின் தம்பி நரசிம்மனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து உள்ளது.இதில் கோபத்தில் இருந்த வெங்கடாசலம் குமாரசாமிபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த தம்பி நரசிம்மனை வழிமறித்து சொத்து பற்றி பேசியுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம் மறைத்து வைத்திருந்த கத்தியால் நரசிம்மனை குத்தினார்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நரசிம்மன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நரசிம்மனுக்கு தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிர் இழந்தார். இதை தொடர்ந்து அண்ணன் வெங்கடாசலத்தின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் உள்ள இடத்தில் இந்த கொலை நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024