ஆத்திரத்தில் தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் ஆத்திரத்தில் தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அண்ணமங்கலம் தேன் வசித்து வருபவர் ஏழுமலை இவருக்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது மேலும் இவரது முதல் மனைவியின் மகன் ராமதாசுக்கும் இரண்டாவது மனைவியின் மகன் கலைச்செல்வனின் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது மேலும் சிறிய சிறிய பிரச்சினைகளால் இருந்த இருவருக்கும் இடையில் நேற்று மிகவும் பெரிய தகரராக மாறியுள்ளது.
நேற்று இரவு கழிவறை கட்டுவதற்காக ராமதாஷிற்கும் கலைச்செல்வனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது இந்த தகராறில் கோபமடைந்த ராமதாஸ் கையில் சில்லாக்கோல் எடுத்து கொண்டு கலைச்செல்வனை குத்தி உள்ளார் இதில் கலைச்செல்வன் துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராமதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.