கொரோனா நோயாளிக்கு மனைவி கொண்டுவந்த பிரியாணி – சாப்பிட அனுமதிக்காததால் கண்ணாடியை உடைத்து ரகளை!

Default Image

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட நபர்கள், அறிகுறி உள்ள நபர்கள் என அனைவரையுமே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே காலை மாலை இரவு ஆகிய மூன்று வேளைகளும் கீரை காய்கறிகள் சத்தான உணவுகள் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகின்றது.

இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்த அவரது மனைவி பிரியாணி செய்து கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அவரது மனைவி கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட கூடாது என மருத்துவ  நிர்வாகம் அனுமதிக்காததால் அவர் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்