பிரியாணி பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி ..! வெங்காயதினால் கிடுகிடு உயர்வு ..!
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெங்காயம் விலை ஏற்ற , இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.வெங்காயம் அதிகம் விளைச்சல் ஆகும் மகாராஷ்டிரா , கர்நாடக மற்றும் ஆந்திர ஆகிய மாநிலக்களில் பெய்த கனமழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.சென்னை கோயம்பேடு , ஒட்டன்சத்திரம் போன்ற முக்கிய காய்கறி சந்தைகளில் வெங்காய வரத்து குறைந்து உள்ளது.இதனால் ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அதிலும் முக்கியமாக பிரியாணி சமைக்க அதிக வெங்காயம் தேவை என்பதால் பிரியாணி கடைக்காரர்கள் வேதனையில் உள்ளனர்.தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளதால் பிரியாணியின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள நடுத்தர உணவகங்களில் சிக்கன் பிரியாணி ரூ.200 , மட்டன் பிரியாணி ரூ.250 க்கும் விற்பனை ஆகிறது.சிறிய மற்றும் சாலையோர கடைகளில் சிக்கன் பிரியாணி ரூ.120-150 வரையும் , மட்டன் பிரியாணி ரூ.150-180 வரையும் விற்பனை ஆகிறது.
நட்சத்திர உணவகங்களில் சிக்கன் பிரியாணி ரூ.300 , மட்டன் பிரியாணி ரூ.350 க்கும் விற்பனை ஆகிறது.பிரியாணியின் விலை உயர்ந்து உள்ளதால் பிரியாணி பிரியர்கள் கவலையில் உள்ளனர்.