‘பிரிட்ஜ் கோர்ஸ்’ – 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…!

பள்ளிக்கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாணவர்கள் தேர்வு இல்லாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் திறன் குறையாமல் இருப்பதை தவிர்க்க புதிய முறையை கையாள கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது. புத்தகத்தை மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் வீட்டில் இருந்தே படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கல்வி தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் பாடப் புத்தகங்கள் தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் கவனித்து பயிலுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூம் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ மாணவிகள் அடுத்த உயர்வகுப்பிற்கு செல்ல தேவையான அறிவுத்திறனை பெறுவார்கள் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025