இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலி தன் திருமணத்தை நிறுத்தி, தன்னை அழைத்துச் செல்லும்படி காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. காலையில் திருமண மண்டபத்தை அடைந்த 24 வயது காதலன், மேடையில் நுழைந்து, மாப்பிள்ளையிடம் இருந்து தாலியை பறித்து, மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் இளைஞனை தடுத்து நிறுத்தி தாக்கினர்.
இச்சம்பவம் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது, சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில் அந்த இளைஞனும் மணப்பெண்ணும் ஒன்றாக சொகுசு விடுதியில் வேலை பார்த்து வந்ததையும் நெருங்கிய காதலில் இருப்பதையும், மணப்பெண்ணின் வற்புறுத்தலின் பேரில்தான் அந்த இளைஞன் மண்டபத்திற்கு வந்ததையும் கண்டறிந்தனர்.
மணமகன் மற்றும் மணபெண்ணின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. அத்துமீறி நுழைந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும், மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கும் இடையே திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…