அரியலூர் தொல்லியல் அகழாய்வில் ராஜேந்திர சோழன் அரண்மனை செங்கல் சுவர் கண்டெடுப்பு…!
அரியலூரில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் ராஜேந்திர சோழன் அரண்மனை செங்கல் சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தமிழக தொல்லியல்துறை சார்பில் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த பகுதியில் நடைபெற்று வரும் இந்த ஆய்வில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு ஆணிகள், கூரை ஓடுகள், மண் பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல் மற்றும் அரண்மனையிருந்ததற்கான சுவடுகளும் கிடைத்துள்ளன.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய இந்த ஆய்வில் தற்பொழுது 7 முதல் 8 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்பொழுது பேரரசன் ராஜேந்திர சோழன் வாழ்ந்த அரண்மனை கட்டடத்தின் 30 அடுக்கு வரிசை கொண்ட செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.