நொய்யல் ஆற்றில் கலப்பது ஆலை கழிவுகள் அல்ல , சாக்கடை நீர் தான் – சுற்றுசூழல்துறை அமைச்சர் !
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நூற்பாலை ஆலைகளின் சாலை கழிவுகள் கலக்கவில்லை என்றும் சாக்கடை நீர் கலப்பதால் தான் நுரை பொங்குகிறது என்று சுற்றுசூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் நீர் அதிகமாக ஓடினாலும் தொடர்ந்து நுரைகள் பொங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முதற்கொண்டு மிகுந்த சிரமம் அடையும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், திருப்பூர் பகுதிகளில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலை ஆலையில் இருந்து கழிவு நீர் ஆற்றில் திறக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.
இதற்கு பதில் அளித்த தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் கே,சி கருப்பணன் ஆற்றில் எந்த வித சாய கழிவுகளும் கலக்கவில்லை என்றும் சாக்கடை கழிவு நீர் கலப்பதால் மட்டுமே நுரை பொங்கியது என்று தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.