திருச்சியில் இரண்டு நாட்களிலேயே வெறிசோடிய மதுக்கடைகள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், மே-7ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு, அரசியல் கட்சி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைவரின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே பல கோடிகளுக்கு மது விற்பனை நடந்துள்ளது.
இந்நிலையில், திருச்சியில், மதுக்கடைகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களிலேயே கடைகள் வெறிசோடி காணப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அப்பகுதி மக்கள் தினக் கூலிகள் என்றும், மக்களிடம் பணம் இல்லாத காரணத்தாலும் யாரும் மது வாங்க வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூரில் அடையாள அட்டை கேட்டதால், மதுக்கடைகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…