ஆளில்லாத கடையில் முறையாக பணத்தை வைத்து விட்டு பிரட் எடுத்துசெல்லும் பொதுமக்கள்.!
இந்தியாவில் கொரோனா காரணமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசியப் கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அனைவரும் சமூக விலையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உள்ளதால் இவர் தனது பேக்கரியில் செல்ப் சர்வீஸ் இந்தத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார் .
இவர் கடையின் முன் பிரட் பாக்கெட்டை வைத்து விட்டு அதன் அருகில் ஒரு பெட்டியை வைத்துள்ளார். ஒரு பாக்கெட் பிரட்டின் விலை 30 ரூபாய் , பிரட் பாக்கெட்டை எடுப்பர்வர்கள் அந்த பெட்டியில் அதற்குரிய பணத்தை வைத்து விட்டு செல்லவும் என ஒரு பதாகையையும் வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆளில்லாத கடையில் கூட முறையாக பணத்தை வைத்து விட்டு ரொட்டி எடுத்துச் செல்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்காக இதனை செயல்படுத்தி உள்ளதாக விக்னேஷ் கூறியுள்ளார். மேலும் மக்கள் முறையாக பணத்தை வைத்து விட்டு செல்வதாகவும் விக்னேஷ் கூறியுள்ளார்.