#BREAKING : சொல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள் – சஞ்சீவ் பானர்ஜி
உயர்நீதின்றத்தில் இருந்து விடை பெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பனர்ஜி அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது.
பின்னர், சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மேகாலாயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி பிரிவு உபச்சார விழா எதிலும் பங்கேற்காமல் தன்னுடைய காரிலேயே சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டார்.
இந்நிலையில், உயர்நீதின்றத்தில் இருந்து விடை பெற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பனர்ஜி அவர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தனிப்பட்ட முறையில் உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள்.
நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். என்னுடைய நடவடிக்கைகள் உங்களை புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல. நீதிமன்றம் நலனுக்கானது. என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்துப் போய் இருக்கிறேன். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத் துறைக்கு நன்றி. சொந்த மாநிலம் என்று தமிழகத்தை 11 மாதமாக சொல்லிக்கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன். ஆதிக்கக் கலாச்சாரத்தில் பணியாற்றுகின்றீர்கள். அதை என்னால் தகர்த்தெறிய முடியவில்லை என்பது தான் வருத்தம். இனிய நினைவுகளுடன் புறப்படுகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பார்’ என எழுதியிருந்தார்.