பாஜக கூட்டணி முறிவு… அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்.! புதிய பாரதம் கட்சி அறிவிப்பு.!

jegan-Moorthy-MLA-Edappadi-Palanisamy

அதிமுக கட்சியின் முன்னாள், இந்நாள் தலைவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவ்வப்போது விமர்சித்து வந்துள்ளார். இதனை குறிப்பிட்டு அதிமுக அவ்வப்போது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தாலும், பாஜக விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதிலும் குறிப்பாக அண்மையில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுக வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்தது.

இதனை அடுத்து தான், நேற்று சென்னை அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என அதிமுக துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.  இந்த முடிவை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தமிழகத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்தும் வெளியேறினர். இதனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பாஜக இருந்த போது இருந்த கட்சிகள் இனி அதிமுக தலைமையில் செயல்படுமா அல்லது பாஜக தலைமையில் செயல்படுமா என்ற கேள்வி இருந்து வந்தது.

பாஜக குறித்து யாரும் விமர்சிக்க கூடாது.! கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட எடப்பாடி பழனிசாமி.!

இந்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது அதிமுக கட்சியில் தங்கள் கூட்டணியை தொடர்வதாகவும், மேலும் , அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு தங்கள் வரவேற்பையும் தெரிவித்துள்ளளது. இது தொடர்பாக அக்கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து, தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.

நன்றி மறந்தவர்கள் அதிமுகவினர்.. இனி அவர்களுக்கு தான் இழப்பு.! எச்.ராஜா கடும் விமர்சனம்.!

அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்.டி.ஏ – இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என அக்கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்