“உடைகிறது திமுக” “ஜாதியை கையில் எடுத்தார் அழகிரி” அதிருப்தியில் ஸ்டாலின்..!!

Published by
Dinasuvadu desk

திமுக தலைவர் கருணாநிதி மரணத்துக்கு பின், முக.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பெற்றதும் பதவி போட்டியில் முக.ஸ்டாலினும் , முக.அழகிரியும் மோதிக்கொள்ள தொடக்கி விட்டனர்.அழகிரியை திமுகவில் இணைக்காமல் இருப்பதால் அழகிரி தனக்கான செல்வாக்கை நிரூப்பிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.இதனால் திமுக தலைமை செய்வதறியாது உள்ளதாக திமுக வட்டாரங்கள் முனகிக்கொண்டு இருக்கிரார்கள்.

திமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் என போர்க்கொடி தூக்கியிருக்கும் மு.க. அழகிரிக்கு, தென் மண்டலத்திலேயே ஆதரவு இல்லை என அக்கட்சி தலைமை கூறி வருகிறது. ஆனால், மெல்ல மெல்ல அழகிரி ஆதரவாளர்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
Image result for மு.க. அழகிரிக்குதிண்டுக்கல் மாவட்ட திமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி. அழகிரி அணியில் இருந்து தீவிர ஸ்டாலின் விசுவாசியாக மாறியவர். ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஐ.பெரியசாமியும், அவரது மகன் ஐ.பி. செந்தில் குமார் பழனி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகின்றனர்.

ஐ.பெரியசாமியின் குடும்பத்தின் கீழ்தான் திண்டுக்கல் மாவட்ட திமுக இருந்தாக வேண்டிய நிலை. இப்படிப்பட்ட சூழலில், மு.க.அழகிரி பேரவை திண்டுக்கல் மாவட்டத்தில் முளைத்திருக்கிறது. இந்த புயல், திமுகவை ஜாதிகள் ரீதியாக பிளவுபடுத்தும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. தனது  சமூகமான தேவர் சமூகத்துக்கே ஐ.பி. அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்; திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ஒக்கலிகா கவுடா மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்களையும் செட்டியார், வன்னியர், அம்பலகாரர் ஆகிய சமூகத்தினரையும் நீண்டகாலமாக புறக்கணித்து வருகிறார் என்பதே அழகிரி பேரவைக்கு அடிக்கல் நாட்டியிருப்போரின் குற்றச்சாட்டு.
இதற்கு உதாரணமாக, “கடந்த சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா கவுடாக்கள் 60% பேர் இருக்கும் வேடசந்தூர் தொகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜனை நிறுத்த வேண்டும் என அச்சமூகத்தினர் விரும்பினர். ஆனால் காந்திராஜன் வெற்றிப் பெற்றால் தமக்கு எதிராக ஒரு குழு முளைத்துவிடும் என கருதிய ஐ.பெரியசாமி ., வேடச்சந்தூரை காங்கிரஸுக்கு தாரை வார்க்க செய்தார். அத்தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.அதேசமயம், அதிமுக வேட்பாளராக ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் வி.பி.பி. பரமசிவம் நிறுத்தப்பட்டார்.
இதனால் திமுகவில் உள்ள ஒக்கலிகா கவுடர்களும் அதிமுக வேட்பாளர் பரமசிவத்துக்கே வேலை செய்ததுடன் குடும்பம் குடும்பமாக வாக்களித்தனர். இதனால் பரமசிவம் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில் காந்திராஜன் நிறுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் பரமசிவம் வென்றிருக்க முடியாது; காந்திராஜனே வென்றிருக்க முடியும்; ஏனெனில் ஒக்கலிகர் வாக்குகள் கணிசமாக பிரியும்; அத்துடன் காங்கிரஸ் ஓட்டுகளும் காந்திராஜனுக்கு கிடைத்திருக்கும்” என சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேபோல்,  திமுக ஆட்சிக் காலங்களில் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் சத்துணவுப் பணியாளர், சத்துணவு ஆயா போன்ற கீழ்நிலை பணிகளே வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் ஆத்தூர் தொகுதியில் 60% ஒக்கலிகா கவுடர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் ஐ.பெரியசாமியை காலந்தோறும் ஜெயிக்க வைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.இந்த நிலை ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் உள்ள கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் திண்டுக்கல் மாவட்ட திமுக, இப்போது தேவர் vs ஒக்கலிகா கவுடர் + கொங்கு வேளாள கவுண்டர் என பிரிந்து கிடக்கிறது.
ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழகிரியை சந்தித்து அவரது அனுமதியுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் அழகிரி பேரவையை தொடங்கிவிட்டனர். இப்போது சுவரெழுத்துகளில் மும்முரம் காட்டி அணி திரட்டுகின்றனர். அத்துடன் ஜாதி ரீதியாகவும் அணி சேர்க்கை தொடங்கியுள்ளது.ஐ.பெரியசாமியால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் காந்திராஜன் மற்றும் மாஜி எம்.எல்.ஏ. காளியப்பன் இருவரும் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர். இவர்களில் காளியப்பன் எந்த நேரத்திலும் அழகிரியை சந்தித்து ஆதரவு தெரிவிப்பார் என்கின்றன அழகிரி பேரவை வட்டாரங்கள். காந்திராஜனுக்கு ஒக்கலிகா கவுடா சமூகத்தில் செல்வாக்கு அதிகம். அதனால் அவர் அழகிரி பக்கம் போனால், திண்டுக்கல் மாவட்ட திமுக செங்குத்தான பிளவையே சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.மேலும் திண்டுக்கல் மாவட்ட சட்டசபை தொகுதிகளில் பரவலாக கணிசமாக் இருக்கும் செட்டியார், வன்னியர், அம்பலகாரர்கள் சமூகத்தினரும் இப்போது ஐ.பி.க்கு எதிராக திரும்பியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்றனர்.முக.அழகிரி ஒரு வழி பண்ணாமல் போகமாட்டார் போல என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது.

DINASUVADU

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

41 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

1 hour ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago