#Breaking:ரயில் விபத்து – 5 பேர் கொண்ட குழு அமைப்பு!

Published by
Edison

சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நேற்று விபத்துக்குள்ளானது.அப்போது ரயிலில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்துள்ளார்.

பயணிகள் யாரும் இல்லையா?:

எனினும்,பணிமனையில் இருந்து வந்தது என்பதால் மின்சார ரயிலில் பயணிகள் யாரும் இல்லை எனவும்,மேலும்,இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயில் விபத்துக்கு காரணம்:

ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே,9 மணி நேரத்துக்கும் மேலான கடும் முயற்சிக்கு பிறகு விபத்துக்குள்ளான ரயில் பேட்டிகள் அகற்றப்பட்டன.

ரயில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு:

இதனையடுத்து,சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி,இந்திய தண்டனை சட்டம் 279,ரயில்வே சட்டப்பிரிவு 151 மற்றும் 154 ஆகிய பிரிவுகளின் கீழ் ரயில் ஓட்டுநர் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்காராம் அளித்த புகாரில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விசாரணைக் குழு:

இந்நிலையில்,சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்னை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவில் மெக்கானிக்,எலக்ட்ரிகல் துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Recent Posts

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

8 minutes ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

46 minutes ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

1 hour ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

3 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

4 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

4 hours ago