#Breaking:அதிர்ச்சி சம்பவம்…வீட்டுக்கூரையை துளைத்தப்படி மேலும் ஒரு துப்பாக்கிக் குண்டு!

Published by
Edison

பெரம்பலூர்:மருதடிஈச்சங்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவரது வீட்டுக் கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிக்  குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது.அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில்,நேற்று முன்தினம் அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றபோது, சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்தது.

இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குண்டு பாய்ந்த சத்தம் கேட்ட போது,அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் இருந்ததால், நல்வாய்ப்பாக எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்நிலையில்,அதே வீட்டுக்கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீட்டிற்குள் தொட்டில் கட்டியிருந்த பகுதிக்கு நேரே மேற்கூரையை துளைத்தப்படி துப்பாக்கி குண்டு இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகில் இருப்பதால் அச்சத்துடன் வசித்து வருவதாகவும்,இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு குண்டு கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…

4 minutes ago

மைதானத்தில் காலில் விழுந்த ரசிகர்! விராட் கோலியின் நெகிழ்ச்சி செயல்.! வைரலாகும் வீடியோ இதோ…

கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…

1 hour ago

ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில்  உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…

2 hours ago

CSK vs MI : சம்பவம் உறுதி! யாருக்கு ஜெயிக்க வாய்ப்பு? சென்னை., மும்பை…

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

3 hours ago

KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…

15 hours ago

என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…

16 hours ago