#Breaking:மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் யார்?-முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது.
இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் 29 இல் முடிவடைகிறது.
இந்நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதன்படி,திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில்,திமுக சார்பில்
- தஞ்சை சு.கல்யாணசுந்தரம்,
- கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்,
- இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர் என்றும்,ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.