#BREAKING:  தேமுதிகவை புறக்கணித்த பா.ம.க.! அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா தேமுதிக..?

Default Image

பா.ம.க தேர்தல் அறிக்கையில் தேமுதிகவின் முரசு சின்னம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையின் பின்புறத்தில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என்று மாம்பழம், இரட்டை இலை, தாமரை குறிப்பிடப்பட்டு பா.ம.க தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், தேமுதிகவின் முரசு சின்னம் பாமகவின் அறிக்கை புத்தகத்தில் இல்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கேற்றாற்போல தற்போது வரை அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு  இதுவரை தொகுதி பங்கீடு முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்