அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்தார். மேலும்,சட்டத்திற்கு புறம்பாக கூட்டப்படவுள்ள இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் அது ஒருங்கினைப்பளர்கள் மற்றும் தொண்டர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார்,விஜய பாஸ்கர்,செங்கோட்டையன்,வளர்மதி,சீதா செல்லப்பாண்டியன்,தம்பிதுரை உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.மேலும்,முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, ஜெயக்குமார்,சிவி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக,இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள நிர்வாகிகள் கூட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் சுற்றப்பயணத்தை தொடங்கியுள்ள ஓபிஎஸ் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, இன்றைய நிர்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெறும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…