தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுகவை பொறுத்தளவில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணிகளை முடிவு செய்து, தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள, கவனித்திட திமுக மண்டலம் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை அக்கட்சி தலைமை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய மண்டலம் மு.சண்முகம் எம்பி, தெற்கு மண்டலம் கனிமொழி எம்பி, வடக்கு மண்டலம் ஜெகத்ரட்சகன் எம்பி, மேற்கு மண்டலம் தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளராக ஆ.ராசா எம்பி உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…