கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி.
கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து தேர்தல் முடிவை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்.
கடந்த டிச19ம் தேதி கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிமுகவை சேர்ந்த திருவிக என்பவர் கடத்தப்பட்டதாகவும், இந்த தேர்தலில் திமுக முறைகேடாக செயல்பட்டதாகவும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது எனவும் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், இந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் 7 வாக்குகளும், அதிமுகவுக்கு 4 வாக்குகளும் பதிவாகியுள்ளது. எனவே, மனுதாரரின் வாக்கினால் தேர்தல் முடிவு மாறப் போவதில்லை என்பதால் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என அறிவித்திருந்த நிலையில், கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், சீனா,…
சென்னை : இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து…
லண்டன் : இசையமைப்பாளர் இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்கனவே படைத்திருந்தார். இந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை…