#Breaking:முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை!

Default Image

அதிமுக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காமராஜ் அவர்கள்,கடந்த 01.04.2015 முதல் 31.03.2021 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக கூறி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீடு,அலுவலகம் உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னையில் 6 இடங்களிலும்,கோவை,தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே,முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்களான இனியன்,இன்பன் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வருமான வரித்துறையினரும் வருகை புரிந்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் காமராஜ் நிறுவனத்திற்கும்,நெடுச்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை நிறுவனத்திற்கும் ஒரே ஆடிட்டர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில்,தற்போது காமராஜுக்கு தொடர்புடைய சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினரும் சோதனையிடுகின்றனர்.

ஏற்கனவே,நெடுச்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்