சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து தாமதமாக சென்ற நிலையில்,அதனை முன் அனுபவமாக எடுத்துக் கொண்ட ஈபிஎஸ்,இந்த முறை 9 மணிக்கு முன்னரே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல காலை 6.30 மணிக்கே புறப்பட்டுள்ளார்.கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவுக்கு காரில் சென்ற ஈபிஎஸ்,தற்போது பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்கிறார்.பொதுக்குழுவுக்கு ஈபிஎஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள்,ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகம் புறப்பட்டுள்ளார் ஓபிஎஸ்.மேலும், அவரது ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகம் செல்கின்றனர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ள நிலையில்,தற்போது ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் செல்கிறார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…