சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்நிலையில்,எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்திலிருந்து பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல புறப்பட்டுள்ளார்.கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து தாமதமாக சென்ற நிலையில்,அதனை முன் அனுபவமாக எடுத்துக் கொண்ட ஈபிஎஸ்,இந்த முறை 9 மணிக்கு முன்னரே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு செல்ல சற்று முன்னதாக புறப்பட்டுள்ளார்.கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவுக்கு காரில் சென்ற ஈபிஎஸ்,தற்போது பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
அவருக்கு தொண்டர்கள்,ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.மேலும்,ஒற்றைத் தலைமையாக,பொதுச்செயலாளராக ஈபிஎஸ் வரவேண்டும் என்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,இன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அதன்மூலம் தற்காலிக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தேடுக்கப்படவுள்ளதாகவும், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அவர்களை நீக்க தனித்தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே,அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…