#Breaking:ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
Edison

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதக உத்தரவிட்டிருந்தது.ஆனால்,கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து,உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும்,தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரியும்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம்,ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் கூறி அதிமுக பொதுக்குழு உறுப்பினரும்,ஓபிஎஸ் ஆதரவாளருமான சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கு எதிராக,ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்,ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றதில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.மேலும்,இந்த விவகாரத்தில் சென்னை உயநீதிமன்ற ஒரு நபர் அமர்வுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும்,மேலும்,ஜூன் 23 அன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

எனினும்,இவ்வழக்கில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அமர்வில் ஓபிஸ் முறையிடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் நேற்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது

இந்நிலையில்,எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

22 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

24 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

56 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago