நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில்,கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல்,தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்,போதிய பரிசோதனைகள்,தொடர் கண்காணிப்பு, சிகிச்சை,தடுப்பூசி ஆகியவற்றை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்சிகளில் கலந்து கொள்வோருக்கு தொற்று ஏற்பட்டால் அனைவரையும் பரிசோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக,கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும்,கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் அதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதே சமயம்,தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய முதல்வர்,இதுவரை தமிழகத்தில் 93.8% பேர் முதல் தவணை மற்றும் 82% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும்,43 லட்சம் பேர் முதல் தவணை மற்றும் 1.02 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளவில்லை என்றும்,இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …