#Breaking:தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது என்றும்,டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி,மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியகவோ,மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும்,டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து,தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.