#Breaking:பெரும் பதற்றம்…ஓபிஎஸ் வாகனம் மீது தாக்குதல்;ஆதரவாளருக்கு கத்திக்குத்து!

Default Image

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறவுள்ளது.இந்த வேளையில்,சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார்.பொதுக்குழுவுக்கு ஈபிஎஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில்,தனது வீட்டின் முன்பு உள்ள ஏராளமான தொண்டர்கள், ஆதரவாளர்களை சந்தித்துவிட்டு,தற்போது பிரச்சார வாகனத்தில் தலைமை அலுவலகத்திற்கு சற்று நேரத்தில் ஓபிஎஸ் வரவுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ள நிலையில்,தற்போது ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகம் வருகிறார்.ஆனால்,அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வாகனத்தை அலுவலகத்திற்கு உள்ளே செல்ல ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கும் நிலையில் இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக, கட்டை,கம்புகள்,கற்களை எரிந்தும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால்,மோதலை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே,ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக,ஓபிஎஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும்,அவரது ஆதரவாளர் ஒருவருக்கு கத்திகுத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்