அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றதற்கு இடையில்,அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில்,அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதன்பட,மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு முறையிட்டார்.இதனைத் தொடர்ந்து,அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…