#Breaking:9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி,கோவை,கிருஷ்ணகிரி,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,சேலம்,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல,டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,வட மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.அதன்படி,இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்க கடல்,மன்னார் வளைகுடா,அரபிக்கடல்,அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதனால்,அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.