#BREAKING: நூல் விலை உயர்வு – பிரதமருக்கு, முதல்வர் கடிதம்!
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.
பருத்தி, நூல் விலையுயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் ஸ்டிரைக்கை தொடங்கியுள்ள நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள், ஜவுளி நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பெருமளவில் இழப்பு ஏற்பட்டதால் பல ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தியை நிறுத்திவிட்டன. நூற்பாலைகளில் பருத்தி மற்றும் நூல் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பருத்தி வாங்க நூற்பாலைகள் பெறும் கடனை திருப்பி செலுத்த 3 மாத அவகாசம் என்பதை 8 மாதமாக நீடிக்க வேண்டும் என்றும் நூற்பாலைகளிடமிருந்து வங்கிகள் பெறும் வைப்பு தொகையை 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், கோவை, கோவை மற்றும் கரூரில் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது. கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி முடங்கியுள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக ஜவுளி உற்பத்தி முடங்கியதால் ரூ.2,000 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/fri3laEMH5
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 16, 2022