#BREAKING: சென்னையில் உலக டென்னிஸ் போட்டிகள் – அமைச்சர் அறிவிப்பு
WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் போட்டி நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு.
சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை WTA உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், உலக மகளிர் டென்னிஸ் போட்டித்தொடரை நடத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடத்தப்படும் என்றும் தொடர்ந்து விளையாட்டு அரங்கை மேம்படுத்தி, அதற்கான பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலையில் நடைபெறவுள்ளது. தமிழக அரசு, அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழக செஸ் சங்கம் உள்ளிட்டவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி தொடர் செப்டம்பர் 26ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.