சென்னை வண்ணாரப்பேட்டையில் பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் சிக்கிய தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு.
சென்னை வண்ணாரப்பேட்டையில் புதிதாக கண் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கட்டிடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று மண் சரிந்ததில் விழுப்புரத்தை சேர்ந்த வீரப்பன், ஆகாஷ் மற்றும் சின்னத்துரை ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆகாஷையும், வீரப்பனையும் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பிவைத்தனர். இவர்களை தொடர்ந்து மனிசரிவில் சிக்கிய சின்னத்துரையை மீட்கும் பணி 2 மணி நேரமாக நடைபெற்ற நிலையில், அவரையும் மீட்டனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர் சின்னத்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். 15 அடி ஆழத்தில் மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் ஆகாஷ், வீரப்பன் ஆகியோர் உயிருடன் மீட்ட நிலையில், மற்றொரு தொழிலாளர் சின்னத்துரை உயிரிழந்தார். சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரையும் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…