சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாற்றுதிறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை வழங்குவதில் பார்வை மாற்று திறனாளிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பிற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது போல ஒரே மாதிரியான தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், அன்றாட செலவுகளை எதிர்கொள்ளும் வகையில் ஒரு நியாயமான தொகையை வழங்க வேண்டும் என்றும், கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த 2019-ஆம் ஆண்டு விசாரித்த நீதிபதிகள், மாறுதிறனாளிகளிடையே பாரபட்சம் காட்ட கூடாது என்றும், அவர்களது செலவுகளை சந்திக்கக்கூடிய அளவில் ஒரு தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவைத்தனர். அதன்படி, மாதம் ரூ.1,000 வழங்குவதாக தமிழக அரசு முடிவு செய்து வழங்கி வருகிறது.
இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நேற்றோதையா அமைப்பு கூடுதல் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ரூ.1,000-லிருந்து, ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, சொற்ப அளவிலான உதவித்தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம். தற்போதைய விலைவாசிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000, ரூ.1500 எப்படி போதுமானதாக இருக்கும்? அதைவிட அந்த தொகையையும் நிறுத்திவிடலாம் என்றும் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சமூக நலத்துறை மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், உதவி தொகை உயர்த்தி வழங்காதது குறித்து சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…