#breaking: ஸ்டெர்லைட் ஆலை திறக்கமடுமா? – முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!!

Default Image

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி கலந்துகொண்டுள்ளனர். அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

மேலும், பாஜக சார்பில் எல்.முருகன், கே.டி.ராகவன், சிபிஎம் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், சிபிஐ சார்பாக முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கவேலு, ஜெயக்குமார், தேமுதிக சார்பில், பாலாஜி, அன்புராஜ், பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என்றும் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் அவ்வாறு அனுமதித்தால் ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த சூழலில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விசிக, அமமுக, மதிமுகாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்