#BREAKING: மருத்துவ கட்டணத்தை மத்திய, மாநில அரசே ஏற்குமா..? உயர்நீதிமன்றம் கேள்வி
தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய, மாநில அரசே ஏற்குமா..? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றாலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில், தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்க வேண்டிய கட்டண தொகை குறித்து வெளியிட்டது.
இந்த கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக பல தரப்பினர் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை மத்திய, மாநில அரசே ஏற்குமா..? அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா..? என கேள்வி எழுப்பி உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும், ஜூன் 16-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.