சென்னை:தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும்,கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான் தொற்று இதுவரை 50 நாடுகளுக்குப் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால்,ஒமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்க அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.எனினும்,மகாராஷ்டிரா,கர்நாடகா,ஆந்திரா,டெல்லி,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில்,ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தற்போது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
அண்டை மாநிலங்களான கர்நாடகா,ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில்,தமிழக எல்லைகளில் தீவிர சோதனை,தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிப்பு,கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு,காவல்துறை,தலைமைச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…