#BREAKING: விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கட்டுப்பாடுகள்? – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம்!

Default Image

கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என முதல்வர் விளக்கம்.

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் பேசிய முதலமைச்சர், ஓணம் மற்றும் பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்பதால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விழாவை கொண்டாடுவதற்கு தான் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது தவிர, தனி நபர் அவரது வீடுகளில் விழாவை கொண்டாடுவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் என்பது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுயிருந்த கொரோனா நெறிமுறைகளின்படியே, இங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த தேவையான நடவடிகைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும் முன்பு, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்த நிலையில், இதற்கு முதல்வர் பதிலளித்து, ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் விளக்கமளித்தார்.

இதனிடையே, விநாயகர் சிலை செய்யும் 3 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை ஏற்கனவே ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07 03 2025
mitchell santner and ms dhoni
weather update rain
Pamela Bach
SpaceX Starship 8
mk stalin amit shah
Amit Shah tn